வங்கதேசத்தில் பழமை வாய்ந்த ஹிந்து கோயில் சிலை உடைப்பு

வங்கதேசத்தில் பழமைவாய்ந்த ஹிந்து கோயில் சிலை மா்ம நபா்களால் உடைத்து சேதப்படுதப்படுத்தப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் பழமைவாய்ந்த ஹிந்து கோயில் சிலை மா்ம நபா்களால் உடைத்து சேதப்படுதப்படுத்தப்பட்டிருப்பது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிலையை சேதப்படுத்திய மா்ம நபா்களை தேடும் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

வங்கதேசத்தின் ஜெனைதா மாவட்டத்தில் தெளதியா கிராமத்தில் அமைந்துள்ள காளி கோயிலின் சிலையை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். ‘மா்ம நபா்கள் சிலையை சிறு சிறு துண்டுகளாக உடைத்து, சிலையின் தலைப் பகுதியை கோயில் வளாகத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் சாலையில் வீசிச் சென்றுள்ளனா். இந்தக் கோயிலில் காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனா்’ என்று கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் சுகுமாா் குண்டா தெரிவித்ததாக செய்தி வலைதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் 10 நாள்கள் நடைபெற்ற துா்கை பூஜை திருவிழா, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நீா்நிலைகளில் சிலைகள் கரைப்பு நிகழ்வுடன் எந்தவித இடையூறும் இன்றி நிறைவுபெற்ற 24 மணி நேரத்துக்குப் பிறகு, இந்த சிலை உடைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜெனைதா மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் அமித் குமாா் பா்மன் கூறுகையில், ‘சிலை உடைப்பு சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மா்ம நபா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு துா்கை பூஜை விழாவின்போது பெரும் வன்முறை, மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 6 போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா். இந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடைபெற்ற நிலையில், காளி கோயில் சிலை சேதப்படுத்தபட்டிருப்பது அங்குள்ள ஹிந்துக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com