நவம்பர் முதல் ஐ-போன் 5சி உற்பத்தி நிறுத்தம்: ஆப்பிள் அறிவிப்பு

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது தாயாரிப்பான ஐபோன் 5சி உற்பத்தி நிறுத்தப் போவதாக  ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நவம்பர் முதல் ஐ-போன் 5சி உற்பத்தி நிறுத்தம்: ஆப்பிள் அறிவிப்பு

சான்பிரான்சிஸ்கோ: தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது தாயாரிப்பான ஐபோன் 5சி உற்பத்தி நிறுத்தப் போவதாக  ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மேக்ரூமர்ஸ் குறிப்பின்படி, அக்டோபர் 2020ல் ஆப்பிள் ஐபோன் 5சி போன் விண்டேஜ் தயாரிப்பாகிவிடும் என்றும், அதன் சேவை மற்றும் சிறிய அளவிலான பழுதுபார்ப்புகளை மட்டுமே சரி செய்ய முடியும்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல், ஆப்பிள் ஐபோன் 5சி தயாரிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு, அனைத்து சேவை மற்றும் பழுது நீக்கம்  முடிவுக்குக் வருவதாக குறிப்பிட்டுள்ளது. அதே நாளில் வை-பை மற்றும் டிடீ-எல்டிஇ உடன் மூன்றாம் தலைமுறை ஐபாட் மினியும் காலாவதியானதாக அறிவிக்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் 5சி செப்டம்பர் 2013ல் ஐபோன் 5எஸ் உடன் வெளியானது. மேலும், ஐபோன் 5சி ஆனது நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை உள்ளிட்ட பிரகாசமான  வண்ணங்களின் விற்பனைக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com