’பெண் குழந்தைகள் தினத்தில் இப்படி ஒரு அப்பா..’ வைரலாகும் விடியோ

சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று ஒரு தந்தை தன் மகளைக் குளிப்பாட்டும் விடியோ வைரலாகி வருகிறது.
’பெண் குழந்தைகள் தினத்தில் இப்படி ஒரு அப்பா..’ வைரலாகும் விடியோ
Updated on
1 min read

சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று ஒரு தந்தை தன் மகளைக் குளிப்பாட்டும் விடியோ வைரலாகி வருகிறது.

உலகளவில் இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்லூரிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புப் பற்றியும் அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தந்தை ஒருவர் வீட்டில் பாத்திரங்களைக் கழுவும் தொட்டியில் தன் மகளை அமர்த்தி அதை நீச்சல் தொட்டியாக மாற்றியதுடன் அதே நீரில் சாப்பாட்டு தட்டுகளைக் கழுவும் விடியோ வைரலாகி வருகிறது.

ஒரே நேரத்தில் குழந்தையை கவனித்துக்கொள்வதும் வீட்டு வேலைகளைச் செய்வதையும் குறிப்பிடும் விதமாக ‘தந்தைகள் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்கள்’ என அந்த விடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com