ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதில் இருந்து ரஷிய அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறினால் போது என்ற அளவுக்கு மேற்கத்திய நாடுகள் பல்வேறு வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தது.
இதையும் படிக்க | இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது: நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனமான ரோஸ்ஃபின்மோனிடரிங், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா.
உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு எதிரான கருத்து பகிர்ந்த விவகாரத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு கடந்த மார்ச் முதல் ரஷியா தடை விதித்தது. ஆனால், பல ரஷியர்கள் சமூக ஊடக நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த தொடர்ந்து விபிஎன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிரான மெட்டா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மாஸ்கோ நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.
ரஷியாவில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பிரபலமாக உள்ளது மற்றும் விளம்பரம் மற்றும் விற்பனைக்கான முக்கிய தளமாகும்.
இந்நிலையில், ரஷியாவில் மெட்டா தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா.