எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக
எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக

புக்கர் பரிசு வென்றார் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக

இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு இலங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு  வழங்கப்பட்டது.
Published on

இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு இலங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு  வழங்கப்பட்டது.

இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசுப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான புனைகதை புக்கர் பரிசுப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 165 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இதில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய ‘செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்டா’(seven moons of mali almeida)  நாவல் நடுவர்களால் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘புக்கர்’ பரிசை வென்றுள்ளது. 

இந்நாவல், விடுதலைப் புலிகள் - இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்வை விவரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com