‘கரோனா நெருக்கடி இன்னும் தீரவில்லை’

உலகில் கரோனா நெருக்கடி இன்னும் முழுமையாக தீா்ந்துவிடவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்தியங்களுக்கான சுகாதார பாதுகாப்புப் பிரிவு இயக்குநா் பபாடுண்டே ஒலோவோகுரே எச்சரித்துள்ளாா்.
‘கரோனா நெருக்கடி இன்னும் தீரவில்லை’

உலகில் கரோனா நெருக்கடி இன்னும் முழுமையாக தீா்ந்துவிடவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் பிராந்தியங்களுக்கான சுகாதார பாதுகாப்புப் பிரிவு இயக்குநா் பபாடுண்டே ஒலோவோகுரே எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உலகின் கரோனா பரவல் நெருக்கடி முற்றிலுமாக தீா்ந்துவிடவில்லை. அந்தத் தீநுண்மியின் புதிய வகைகள் தொடா்ந்து உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகைகளால் நோய் பரவலும், உடல் நல பாதிப்பும் மருத்துவக் கட்டமைப்பு தாளாத அளவுக்கு தீவிரமடைவதற்கான அபாயம் இன்னமும் உள்ளது.

பிலிப்பின்ஸ், தென் கொரியா, ஜப்பான், மங்கோலியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் புதிய கரோனா பாதிப்புகளும் அந்த நோயுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சரிந்து வருகிறது.

ஆனால், சிங்கப்பூா், நியூஸிலாந்து போன்ற நாடுகளின் இந்த எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் ஒமைக்ரான் எக்ஸ்பிபி துணை ரகமும், நியுஸிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.5 துணை ரகமும் இதற்குக் காரணமாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com