போராடத் துணிவோம், வெல்லத் துணிவோம்: சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு

"போராடுவதற்கு துணிவோம், வெற்றி பெறுவோம், அதற்காகக் கடினமாக உழைப்போம், தொடர்ந்து முன்னேறுவதில் உறுதியாக இருப்போம் என்று  குறிப்பிட்டுள்ளார் சீன அதிபர்.
கட்சி காங்கிரஸில் உரையாற்றும் ஜிங்பிங்
கட்சி காங்கிரஸில் உரையாற்றும் ஜிங்பிங்

பெய்ஜிங்: போராடத் துணிவோம், வெல்லத் துணிவோம் என அழைப்பு விடுத்துள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மாபெரும் மக்கள்  அரங்கத்தில்  நடந்த சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது  மாநாட்டின் நிறைவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசினார்.

தலைநகா் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் ஏழு நாள்கள் நடைபெற்ற சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20  ஆவது மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது.  பின்னர் நடைபெறும் மத்தியக் குழு கூட்டத்திற்கு பின்னர், போட்டியில்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபராக ஷி ஜின்பிங் தேர்வு செய்யப்படுகிறார். 

நிறைவு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் ஷி ஜின்பிங், "போராடுவதற்குத் துணிவோம், வெற்றி பெறுவோம், அதற்காக கடினமாக உழைப்போம், தொடர்ந்து முன்னேறுவதில் உறுதியாக இருப்போம் என்று கூறினார்.

கட்சி காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகள்
கட்சி காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகள்

சீன அதிபா் ஷி ஜின்பிங் (69) இரண்டாவது முறையாக அதிபராகப் பதவி வகித்து வருகிறாா். அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மா சேதுங்குக்கு இணையாக ‘மையத் தலைவா்’ என ஷி ஜின்பிங் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவா் மூன்றாவது முறையாக அதிபராவதற்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

அதேவேளையில், ஜின்பிங்குக்கு அடுத்த நிலையில் உள்ள பிரதமா் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்களின் பதவிகளில் மாற்றங்கள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக, சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு கூட்டத்தில், ​​நாடு முழுவதும் உள்ள கட்சிக் கிளைகளில் இருந்து 2,296 பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய மத்திய குழுவைத் தேர்ந்தெடுக்க உள்ளது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரமிக்க நிலைக்குழுவைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக மத்தியக் குழு ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.

கட்சியின் நடைமுறைப்படி பொதுச் செயலாளரை நிலைக்குழு தேர்ந்தெடுக்கிறது.

பின்னர் நடைபெறும் மத்தியக் குழு கூட்டத்தில் அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கான கட்சியின் அரசியலமைப்பில் திருத்தம் உள்பட பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளது.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக பதவியேற்பதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் முக்கிய ஆளும் குழுவாக மத்திய குழு உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் கட்சியும் நாடும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளையும் மத்தியக் குழு கோடிட்டுக் காட்டும் எனவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி  69 வயதான ஷி ஜின்பிங்கிற்கு போட்டியில்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபராவதற்கான ஒப்புதல் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதவிக்காலம் அவரை மன்னரைப் போல வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் தொடர வைக்கும் என பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

புதிய மத்தியக் குழுவின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, புதிய நிலைக்குழு உறுப்பினர்களுடன் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் முன்பு உரையாற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில், ஷி ஜின்பிங்குக்கு முன் அதிபராக இருந்த ஹு ஜின்டாவ், ஷி ஜின்பிங்கின் ஆரம்பகால அரசியல் வாழ்வு உயா்வதற்குக் காரணமாக இருந்த 105 வயது மூத்த தலைவா் சாங் பிங் உள்ளிட்ட கட்சியின் முன்னாள் தலைவா்கள் பெரும்பாலானோா் கலந்துகொண்டனா். இருப்பினும், எதிர்பாராதவிதமாக, முன்னாள் அதிபர்  ஹு ஜின்டாவ் நிறைவு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவா்கள் அனைவருக்கும் ஷி ஜின்பிங் அருகே முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com