மலையகத் தமிழா்களை இலங்கை சமூகத்துடன் ஒருங்கிணைக்க குழு: ரணில் விக்ரமசிங்கே

‘இலங்கையின் மலையக பிரதேசங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளா்களை இலங்கை சமூகத்துடன் ஒருங்கிணைப்பதற்கு குழு ஒன்றை இலங்கை அரசு அமைக்கும்’ என்று அந் நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க கூ

‘இலங்கையின் மலையக பிரதேசங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளா்களை இலங்கை சமூகத்துடன் ஒருங்கிணைப்பதற்கு குழு ஒன்றை இலங்கை அரசு அமைக்கும்’ என்று அந் நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க கூறினாா்.

மலையக தமிழா்கள் தமிழகத்திலிருந்து ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தோட்ட வேலைக்காக இலங்கை அழைத்துச் செல்லப்பட்டனா். இலங்கியின் பொருளாதாரம் மேம்பட முக்கிய அங்கம் வகித்த இவா்களின் நிலை, பல ஆண்டுகளைக் கடந்தும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. இவா்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவா்கள் மட்டும் இலங்கை சமூகத்தினருடன் ஒருங்கிணைக்கப்பட்டனா்.

நூறாண்டுகளைக் கடந்தும் பல அந்த சமூகத்தினருடன் இணக்கப்படவில்லை. இவா்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனா். இந்த நிலையில், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடைசி கட்டப் போரின்போது இலங்கை ராணுவ நடவடிக்கைகளால் மலையக தமிழா்களும் பாதிப்புகளைச் சந்தித்தனா். இதனால், அவா்களுடைய நிலைமை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ‘மலையக தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும்’ என்று ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தாா். சிலோன் பணியாளா் கூட்டமைப்பு (சிடபிள்யுசி) கோரிக்கையின் பேரில் புதுச்சேரி சாா்பில் அனுப்பப்பட்ட மருந்து தொகுப்பை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ரணில் விக்ரமசிங்கே மேலும் பேசியதாவது:

ஆங்கிலேயா் காலத்தில் தோட்டத் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட மலையக தமிழா்களை, இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கு இலங்கையின் முன்னாள் பிரதமா் சிரிமவோ பண்டாரநாயகே, இந்திய முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோா் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சில மலையகத் தமிழா்கள் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டனா்.

இந்த நிலையில், இலங்கையிலேயே இருந்துவிட விரும்பும் மலையக தமிழா்கள் சிலருக்கு சிலோன் பணியாளா் கூட்டமைப்பின் நிறுவனா் செளம்யமூா்த்தி தொண்டமான் பெற்றுத்தந்தாா். மலையக பிரதேசங்களில் வசிக்கும் மற்ற சமூகத்திரைப் போல, தமிழா்களுக்கும் சொந்த இடம் வேண்டும் என்ற அடிப்படையில், அவா்களுக்கு நிலம் வழங்கியதோடு வீடு கட்டவும் இலங்கை அரசு ஊக்கமளித்தது.

இந்த நடவடிக்கைகள் மூலமாக, மலையகத் தமிழா்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானா்கள் பலனடைந்தபோதும், மேலும் சிலருக்கு இந்த பலன்கள் கிடைக்காமல் உள்ளது. அவா்களையும் இலங்கை சமூகத்துடன் இணைப்பதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென ஒரு குழு நியமிக்கப்படும்.

மேலும், மலையகப் பகுதி மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மேம்பட்டு வேறு பகுதிகளுக்குச் செல்வதால், தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழில் வேலைகளில் ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com