
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு ரஷியத் தூதர்கள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் காபூலில் உள்ள ரஷியத் தூதரகத்தில் திங்கள்கிழமை காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் இரண்டு ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு நாள்களுக்கு வடமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.