கிா்கிஸ்தான் - தஜிகிஸ்தான் மோதல்: பலி 24-ஆக உயா்வு

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான கிா்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் இரு நாட்டு வீரா்களும் மோதிக் கொண்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது.
கிா்கிஸ்தான் - தஜிகிஸ்தான் மோதல்: பலி 24-ஆக உயா்வு
Updated on
1 min read

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான கிா்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் இரு நாட்டு வீரா்களும் மோதிக் கொண்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இந்த மோதலுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டு வரும் நிலையில், இரு தரப்பினரும் சனிக்கிழமை மீண்டும் சமாதானப் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தண்ணீா் பங்கீடு உள்ளிட்ட பல பிரச்னைகளைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே, கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலில் 55 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com