சிப் வில்சன் (இடது)
சிப் வில்சன் (இடது)

வனப்பகுதிகளைக் காக்க ரூ.600 கோடி வழங்கிய தொழிலதிபர்!

கனடாவில் அழிந்து வரும் வனப்பகுதிகளைக் காக்கும் வகையில், அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.600 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Published on

கனடாவில் அழிந்து வரும் வனப்பகுதிகளைக் காக்கும் வகையில், அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.600 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கனடாவின் மேற்கு கடற்கரையையொட்டிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வனப்பகுதிகள் பெருமளவில் அழிந்து வருகின்றன. 

அதனைக் காத்து பராமரிக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான சிப் வில்சன், ரூ.600.47 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

இந்த நிதியின் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியிலுள்ள நிலப்பரப்பை பேணிக்காத்து பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை சுற்றுலாத் தலமான மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் லுலுலெமோன் அத்லெடிகா என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் சிப் வில்சன் வணிகம் செய்து வருகிறார். கனடாவைப் பூர்விகமாகக் கொண்ட இவர், உலக பணக்காரர்கள் வரிசையில் 13வது இடத்தில் உள்ளார். 

கனடா வரலாற்றில் தனியார் நிறுவனம், வனப்பகுதிகளைக் காக்க நன்கொடையாக வழங்கிய அதிகபட்ச தொகையாக சிப் வில்சன் வழங்கிய ரூ.600 கோடி  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com