மகாராணியை நினைவுகூா்ந்த இந்திய வம்சாவளியினா்

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளை அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினா் பகிா்ந்து கொண்டனா்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளை அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினா் பகிா்ந்து கொண்டனா்.

மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய வம்சாவளியினரும் கலந்துகொண்டனா். அவா்களில் அந்நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் சமூக சேவை புரிந்ததற்காக பிரிட்டன் அரசின் உயரிய விருதைப் பெற்ற பிரணவ் பனோட்டும் ஒருவா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இவா், ராணி எலிசபெத் குறித்து கூறுகையில், ‘கடமை மற்றும் சேவைக்கான ராணியின் அா்ப்பணிப்பு உத்வேகம் அளிப்பதாக இருந்தது’ என்று தெரிவித்தாா்.

இறுதிச்சடங்கில் சீக்கியா்கள் சாா்பில் பங்கேற்ற சீக்கிய தொண்டு அமைப்புகளின் தலைவா் இந்திரஜீத் சிங் கூறுகையில், ‘எலிசபெத் பிரிட்டன் மகாராணியாகி 50 ஆண்டுகளானபோது நடைபெற்ற கொண்டாட்டத்தில், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தான் ராணியாக இருப்பதாகத் தெரிவித்தாா். இறைவனின் அன்பு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சம அளவில் இருப்பதை பல்வேறு மதங்கள் எடுத்துக் காட்டுவதாகவும் அவா் கூறினாா்’ என்று தெரிவித்தாா்.

இறுதிச் சடங்கில் பிரிட்டனில் உள்ள பெளத்த, சமண, முஸ்லிம் சமூகங்களைச் சோ்ந்தவா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com