உக்ரைன் பொதுமக்கள் மீது தாக்குதல்: ஜப்பான் கண்டனம்

உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயல், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார். 
உக்ரைன் பொதுமக்கள் மீது தாக்குதல்: ஜப்பான் கண்டனம்

கிவ் புறநகர்ப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயல், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

உக்ரைன் நகரங்களில் தெருக்களில் கிடக்கும் உடல்கள் மற்றும் சிலர் கைகள் பின்னால் கட்டியிருப்பது போன்ற புகைப்படங்களைக் கண்டு ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே கண்டித்துள்ளனர். 

ரஷியாவிற்கு எதிராகக் கூடுதல் தடைகளில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கும் அதேவேளையில், ஜப்பான் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாகச் செயல்படுத்தும்.

சர்வதேச சட்டத்தை மீறும் மனித உரிமைகள் பிரச்னைகள் மற்றும் செயல்களை நாம் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். 

அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்ப ஜப்பான் ரஷியாவிற்கு எதிராகத் தொடர் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com