ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம்

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம்
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம்

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 40 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் அறிவிப்பு செய்ததிலிருந்து பல்வேறு உலக நாடுகளும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

மேலும் ரஷியாவை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ரஷியாவிற்கு எதிராக 93 நாடுகளும், ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.

பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ரஷியா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com