ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூா்த்தி, இன்போஃசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தியின் மகள் ஆவாா். அக்ஷதா பிரிட்டனில் குடியேறிவிட்டபோதும், இந்தியாவில் உள்ள சொத்தில் (இன்போஃசிஸ் நிறுவனத்தில் 0.93 சதவீத பங்கு) இருந்து வரும் வருவாய்க்கு பிரிட்டனில் வரி கட்டும் முறையைப் பின்பற்றவில்லை. இதன் மூலம் அக்ஷதா பிரிட்டனைச் சேர வேண்டிய கோடிக்கணக்கில் வரியை மிச்சப்படுத்திக் கொள்கிறாா் என்றும், பிரிட்டன் நிதியமைச்சரின் மனைவி 9 ஆண்டுகளாக இங்கு வசித்தபோதிலும் முழுமையாக பிரிட்டனில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.