எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யும் இம்ரான் கான் கட்சியினர்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்யவுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.
இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்யவுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

புதிய பிரதமராக முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃபை எதிர்க்கட்சிகள் இன்று தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் ராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சியின் அதிகார்வப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று ஆட்சியை கலைத்த அதிபரின் உத்தரவுக்கு தடை விதித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், சனிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கீழ் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி, இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு 174 பேர் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com