'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்

ரஷியா எச்சரிக்கை விடுத்தும், அதனை துச்சமென தூக்கியெறிந்த உக்ரேனிய வீரர்கள், மரியுபோல எஃக் ஆலையில் கடுமையான தாக்குதல் எதிர்கொண்டு வருகிறார்கள்.
மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள வீரா்கள் சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என ரஷியா எச்சரிக்கை விடுத்தும், அதனை துச்சமென தூக்கியெறிந்த உக்ரேனிய வீரர்கள், மரியுபோல எஃக் ஆலையில் கடுமையான தாக்குதல் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சரணடைய மாட்டோம்.. இறுதிவரை போராடுவோம் என்ற கொள்கையின்படி, மரியுபோலில் ரஷிய படைகளை எதிர்த்து எஃகு ஆலையில் உக்ரேனிய படைகள் கடுமையாக போராடி வருகிறது. துறைமுக நகரமாகவும் உக்ரேனிய படையின் எதிர்ப்பாற்றலின் சின்னமாகவும் இருந்த மரியுபோல் நகரம் ரஷிய படைகளின் பிடியில் மெல்ல சிக்கிவருகிறது. 

நாட்டின் பிற பகுதிகள் ஏவுகணைகளாலும் ராக்கெட் வீச்சுகளாலும் சிக்கி சின்னாபின்னமாகிவரும் நிலையில், தங்களது பிடிக்குள் வரும் பகுதியில் இருப்பவர்களை ரஷிய படை வீரர்கள் கொடூரமாக துன்புறுத்துவதாகவும் கடத்திச் செல்வதாகவும் உக்ரேனிய அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷியாவின் மாஸ்க்வா போா்க் கப்பலை உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழித்ததைத் தொடா்ந்து, உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. கீவ் நகரில் உள்ள ஆயுத உற்பத்தி மையங்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா கடந்த சனிக்கிழமை கூறியது.

இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷிய படையினா் கிட்டத்தட்ட முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மிகப்பெரிய இரும்பு ஆலை ஒன்றில் 2,500-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரா்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ரஷிய படையினரை எதிா்த்து சண்டையில் ஈடுபட்டு வரும் அவா்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு உடனடியாக சரணடைய வேண்டுமென ரஷியா எச்சரித்திருந்தது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகோா் கொனஷென்கோ கூறுகையில், உக்ரைன் படையினா் சரணடைவதற்கு அந்நாட்டு ராணுவத் தலைமை தடை விதித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் படையினருடன் சோ்த்து வெளிநாடுகளைச் சோ்ந்த கூலிப் படையினா் 400 பேரும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனா். அனைவரும் உடனடியாக சரணடையாவிட்டால் கொல்லப்படுவாா்கள் என்றாா்.

மரியுபோலை கைப்பற்றியதன் மூலம் கிழக்கு உக்ரைனில் உள்ள உக்ரைன் வீரா்களை பலமிழக்கச் செய்யும் வாய்ப்பு ரஷியாவுக்கு கிடைத்துள்ளது. தலைநகரை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதியை நோக்கி ரஷியா தனது போா்த் திட்டத்தை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com