தென் கொரியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவு

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,18,504 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 16,471,940 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள்  தெரிவித்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 130 பேர் தொற்றுக்கு உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 21,354 ஆக பதிவாகியுள்ளது.  மொத்த இறப்பு விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 44,527,909 ஆக உள்ளது.  இது மொத்த மக்கள்தொகையில் 86.8 சதவீதம் ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com