தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்: 400ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு- நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்: 400ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்: 400ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு- நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் வெள்ளம் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கினர். 

வெள்ளத்தில் சிக்கி பலரும் காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக காவல்துறை, ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் குழுக்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வரும் பணியைப் பேரிடர் மேலாண்மை செய்து வருகிறது. இப்பகுதியில் கட்டடங்கள், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 395 ஆக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் காணாமல் போன 50க்கும் மேற்பட்டவர்களை தேடுதல் பணிகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இதுதொடர்பாக வியாழக்கிழமை பேசிய அந்நாட்டின் சைரில் ராமபோஃசா, இதுவரை இல்லாத பேரிழப்பை நாடு சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com