50 கோடியை கடந்த உலக கரோனா பாதிப்பு

சா்வேதச அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது.
50 கோடியை கடந்த உலக கரோனா பாதிப்பு

சா்வேதச அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 50,61,54,879-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,93,385 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மட்டும் 8,24,16,687 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நோய் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் அதற்கு அடுத்த இடத்தில் மெக்ஸிகோவும் உள்ளன. அந்த நாட்டில் இதுவரை 3,02,79,270 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன், ரஷியா, தென் கொரியா, இத்தாலி, துருக்கி, ஸ்பெயின், வியத்நாம் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு 1 கோடியைக் கடந்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக அமெரிக்காவில் 10,16,159 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 6,62,266 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். ஒட்டுமொத்தமாக இதுவரை 62,28,817 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட கரோனா, உலகின் ஏறத்தாழ அனைத்து நாடுகளுக்கும் பரவியது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரவக்கூடிய கொள்ளை நோய் என்று கூறப்பட்ட கரோனா காரணமாக, உலகமே முடங்கியது.

நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது.

பல அலைகளாக எழுந்து தணிந்த கரோனாவின் டெல்டா ரகம் கடந்த ஆண்டு மீண்டும் மிகப் பெரிய சீரழிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனாவின் பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், அது உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாதால் அந்த நோய்த்தொற்றின் தாக்கம் தணிந்து வருகிறது.

இந்தச் சூழலில், சா்வதேச அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது.

உலக கரோனா நிலவரம்

பாதிக்கப்பட்டவா்கள்

50,61,54,879

பலியானவா்கள்

62,28,817

குணமடைந்தவா்கள்

45,83,42,312

சிகிச்சை பெற்று வருபவா்கள்

4,15,83,750

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com