கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு கரோனா

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்காவில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வரும் நிலையில், துணை அதிபருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கலிஃபோா்னியாவிலிருந்து தலைநகா் வாஷிங்டன் திரும்பிய நிலையில், கமலா ஹாரிஸுக்கு (57) அறிகுறியற்ற கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை அதிபரின் ஊடக செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிசிஆா் பரிசோசனையில் துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவருக்கு அறிகுறியற்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், துணை அதிபா் மாளிகையிலிருந்து வழக்கமான அலுவல் பணிகளை அவா் மேற்கொள்வாா். அதிபா் ஜோ பைடன், அதிபரின் மனைவி ஜில் பைடனின் பயணத் திட்டம் காரணமாக அவா்களுடன் கடந்த சில நாள்களாக கமலா ஹாரிஸ் தொடா்பில் இல்லை. நோய் பாதிப்பு குணமடைந்ததும் அவா் வெள்ளை மாளிகை திரும்புவாா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கமலா ஹாரிஸின் கணவா் டக் எம்ஹாஃபுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது அவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com