போருக்கு இடையூறு செய்யும் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை: புதின் எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எந்த நாடாவது இடையூறு செய்தால் அவர்கள் மீது விரைவான போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
விளாதிமீா் புதின்
விளாதிமீா் புதின்

உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு எந்த நாடாவது இடையூறு செய்தால் அவர்கள் மீது விரைவான போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்களைக் கடந்துள்ளது. போரில் உக்ரைனுக்கு அதிக சேதங்களை உருவாக்கியுள்ள ரஷியா தொடர்ந்து அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துக் கைப்பற்றி வருகிறது.

குறிப்பாக, மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் அனைத்தும் முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரைத் தடுக்க வெளியில் இருக்கும் யாராவது(பிற நாடுகள்)  இடையூறு செய்தால் எங்கள் பதில் மின்னல் வேகத்தில் இருக்கும்’ என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com