உக்ரைனிலிருந்து இதுவரை 10 லட்சம் பேர் வெளியேற்றம்

உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி உள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 
உக்ரைனிலிருந்து இதுவரை 10 லட்சம் பேர் வெளியேற்றம்

உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறி உள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்களைக் கடந்துள்ளது. போரில் உக்ரைனுக்கு அதிக சேதங்களை உருவாக்கியுள்ள ரஷியா தொடர்ந்து அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துக் கைப்பற்றி வருகிறது. 

குறிப்பாக மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் அனைத்தும் முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

இந்நிலையில் உக்ரைனிலிருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். 

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சீன அரசு செய்தி நிறுவனத்து அளித்த பேட்டியில், 

உக்ரைனியர்கள் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அனுப்பியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட சீன குடிமக்கள் அடங்குவர்

தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. 

தொடர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com