ஷாங்காயில் நீளும் பொதுமுடக்கம்: பாதிக்கப்படும் முதியவர்கள்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐந்து வாரங்களுக்கும் மேலாக நீளும் பொதுமுடக்கத்தால், ஷாங்காய் நகரில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஷாங்காயில் நீளும் பொதுமுடக்கம்: பாதிக்கப்படும் முதியவர்கள்
ஷாங்காயில் நீளும் பொதுமுடக்கம்: பாதிக்கப்படும் முதியவர்கள்

ஷாங்காய்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐந்து வாரங்களுக்கும் மேலாக நீளும் பொதுமுடக்கத்தால், ஷாங்காய் நகரில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஷாங்காய் நகரில் கரோனா பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியது. அது முதல் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 337 பேர் பலியாகியுள்னர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 80 வயதைக் கடந்தவர்கள் என்கிறது புள்ளிவிவரம்.

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளில் முக்கியமானதாக கரோனா பாதித்தவர்கள், அவர்களுடன் இருந்தவர்கள் கட்டாயம்ட அரசு தனிப்படுத்தும் மையத்துக்குச் சென்றாக வேண்டும். அங்குச் செல்வோர் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் அடிப்படைத் தேவைகளுக்காக அவதிப்படுவதாகவும் சில விடியோக்கள் வெளியாகிவருகின்றன. இதுபோல வயதானவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்குச் செல்லும் போது அவர்கள் உதவியாளர்கள் இன்றி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சுனாமி போன்ற பாதிப்பு

சீனாவில் வெள்ளிக்கிழமை 20,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த நாடு சுனாமி போன்று ஒமைக்ரான் பாதிப்பை எதிா்கொண்டு வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், 3-ஆவது வாரமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அபாயம் நிறைந்த பகுதிகள் அதிகரித்து வருவதால், அங்கு 2.1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நியூக்ளிக் அமில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பெய்ஜிங்கில் சனிக்கிழமை முதல் (ஏப். 30) பொது இடங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் பரிசோதனை சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டுமென மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை இரண்டு பகுதிகள் கரோனா தொற்று பரவல் நிறைந்த பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டன. அதில் ஒன்று அதிக இடா் நிறைந்த பகுதியாகவும், மற்றொன்று மிதமான இடா் கொண்ட பகுதியாகவும் வரையறுக்கப்பட்டன. இதன்மூலம் பெய்ஜிங்கில் அதிக இடா் நிறைந்த பகுதியாக 6 பகுதிகளும், மிதமான இடா் கொண்ட பகுதியாக 19 பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளதாக ஜின்ஜுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தற்போது ஒமைக்ரான் எனும் சுனாமியை நாங்கள் எதிா்கொள்கிறோம். இந்த உருமாறிய தீநுண்மி ரகம் கற்பனைக்கு எட்டாத அளவில் வேகமாகப் பரவும் தன்மை வாய்ந்தது. டெல்டா ரக தீநுண்மியை சீனா வெறும் 14 நாள்களில் கட்டுப்படுத்தியது. ஆனால், ஒமைக்ரான் தீநுண்மி தாக்குதல் மிகவும் தீவிரமாக உள்ளது’ என்றாா்.

சீனாவில் அதிகரித்து வரும் கரோனாவால் பெய்ஜிங்கில் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த சில நாள்களாக அதிக எண்ணிக்கையில் கரோனா பரவல் பதிவு செய்யப்படுவதையடுத்து, அங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளிகளை மூட நகர நிா்வாகம் உத்தரவிட்டதையடுத்து தற்போது  திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் பரவியதைப்போல பெய்ஜிங்கிலும்  கரோனா பரவும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடையை அறிவித்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com