தைவான் வந்தாா் நான்சி பெலோசி: 20 போா் விமானங்களை பறக்கவிட்டு சீனா எதிா்ப்பு
சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி செவ்வாய்க்கிழமை மாலை வந்திறங்கினாா்.

தைபேயில் உள்ள சுங்ஷான் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வந்திறங்கிய நான்சி பெலோசியை வரவேற்ற தைவான் அதிகாரிகள்.








