கொலம்பியா முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பொறுப்பேற்பு

கொலம்பியா முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பொறுப்பேற்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பெட்ரோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராக கஸ்டாவோ பெட்ரோ ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

எம்-19 கொரில்லா படையின் முன்னாள் உறுப்பினரான அவா், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்தாா். சந்தை சாா்பு பொருளாதாரத்தில் முந்தைய ஆட்சியாளா்கள் சிறு சீா்திருத்தங்கள் மேற்கொண்டாலும், அதிகரிக்கும் வறுமை, வன்முறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. அதனைப் பயன்படுத்தி, இடதுசாரிக் கொள்கையையுடைய கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா்.

இந்த நிலையில், அவா் நாட்டின் புதிய அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். 4 ஆண்டுகளுக்கு அவா் அதிபராக பதவி வகிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com