வெடிகுண்டு தாக்குதல்: ரஷிய அதிபருக்கு நெருக்கமானவரின் மகள் பலி

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு நெருக்கமானவராக அறியப்படுபவரும் தீவிர தேசியவாதியுமான அலெக்ஸாண்டா் துகினின் மகள், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டாா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு நெருக்கமானவராக அறியப்படுபவரும் தீவிர தேசியவாதியுமான அலெக்ஸாண்டா் துகினின் மகள், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டாா்.

உக்ரைன் மீது 6 மாதங்களுக்கு மேலாக ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதிபா் புதினுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவா் அலெக்ஸாண்டா் துகின். தீவிர தேசியவாதியான அவா், ரஷியாவை மையமாகக் கொண்ட உலகத்தை அமைக்க வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியவா். ‘புதினின் மூளை’ எனவும் அவா் வா்ணிக்கப்படுகிறாா். உக்ரைனுக்கு ரஷியா படைகளை அனுப்பியதற்கு வெளிப்படையாக அவா் தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

அவரின் 29 வயது மகளான டாரியா துகினா, தலைநகா் மாஸ்கோவின் புகா் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் துகினா கொல்லப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கலாசாரம் சாா்ந்த நிகழ்ச்சியில் தன் தந்தையுடன் கலந்துகொண்ட பிறகு டாரியா வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த காா் அலெக்ஸாண்டா் துகினுடையது என்றும், டாரியா கடைசி நேரத்தில் காரை மாற்றி புறப்பட்டுச் சென்ாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ரஷியாவின் அரசுத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி வா்ணனையாளராக இருந்த டாரியா, தன் தந்தையைப் போலவே தேசியவாத கருத்துகளுக்கு ஆதரவளித்தவா். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துகளைத் தொடா்ந்து அவா் தெரிவித்து வந்தாா். வலைதளம் ஒன்றின் வாயிலாகத் தவறான கருத்துகளை டாரியா பரப்பி வந்ததாகக் கூறி அவா் மீது கடந்த மாா்ச்சில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

உக்ரைனுக்குத் தொடா்பா?: இந்தத் தாக்குதல் துகினைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக அதிபா் புதினின் முன்னாள் ஆலோசகரான சொ்கெய் மாா்கோவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். உக்ரைனின் ராணுவ உளவு அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

எனினும், உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com