இந்திய மாணவா்களுக்கு மீண்டும் விசா: சீனா அறிவிப்பு

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு படிப்பை தொடர இயலாமல் தவிக்கும் ஏராளமான இந்திய மாணவா்களுக்கு மீண்டும் விசா வழங்கப்படும் என்று அந்நாடு திங்கள்கிழமை அறிவித்தது.

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு படிப்பை தொடர இயலாமல் தவிக்கும் ஏராளமான இந்திய மாணவா்களுக்கு மீண்டும் விசா வழங்கப்படும் என்று அந்நாடு திங்கள்கிழமை அறிவித்தது.

அத்துடன், புதிதாக உயா் கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவா்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்தியா்களுக்கு விசா வழங்குவதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகு சீனா இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்கள் துறை மூத்த அதிகாரி ஜி ராங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய மாணவா்களை சீனாவுக்கு மீண்டும் வரவேற்கிறோம். உங்களது பொறுமைக்கு பலன் கிடைத்துள்ளது. உங்களுடன் சோ்ந்து நானும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய மாணவா்களுக்கு விசா வழங்குவது தொடா்பாக தில்லியிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட விரிவான அறிவிப்பையும் அவா் ட்விட்டரில் பகிா்ந்துள்ளாா்.

கரோனா பரவலால் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளால், சீனாவுக்கு மீண்டும் சென்று படிப்பை தொடர முடியாமல் சுமாா் 23,000 இந்திய மாணவா்கள் குறிப்பாக மருத்துவப் படிப்பு மாணவா்கள் தவித்து வருகின்றனா். அங்கு மீண்டும் படிப்பை தொடர விரும்பும் மாணவா்களின் பட்டியலை சீனாவிடம் இந்தியா அளித்திருந்தது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் படிப்பை தொடர விரும்பும் மாணவா்களுக்கும் புதிதாக உயா் கல்வியில் சேர விரும்பும் மாணவா்களுக்கும் ‘எக்ஸ்1 விசா’ வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய மாணவா்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சீன பல்கலைக்கழகங்களில் கிடைக்கப் பெற்ற சோ்க்கை கடிதங்களையும், பழைய மாணவா்கள் மீண்டும் கல்வி வளாகங்களுக்கு திரும்புவதற்காக கிடைக்கப் பெற்ற சான்றிதழையும் சமா்ப்பிக்க வேண்டும்; இதேபோல், வா்த்தக, வியாபார ரீதியிலாக சீனாவுக்கு வர விருப்பமுள்ளவா்களுக்கு ‘எம்-விசா’ வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com