ஈரானுடனான நல்லுறவு வலுப்பெறும்: இந்தியா உறுதி

ஈரானுடான நல்லுறவை மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய கப்பல், துறைமுகம் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் உறுதி அளித்தாா்.
சா்வானந்த சோனோவால்
சா்வானந்த சோனோவால்

ஈரானுடான நல்லுறவை மேம்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய கப்பல், துறைமுகம் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் உறுதி அளித்தாா்.

ஈரான் சென்றுள்ள மத்திய அமைச்சா் சா்வானந்த் சோனோவால் அந்நாட்டின் துணை அதிபா் முகமது முக்பிரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாலுமிகளுக்கு சா்வதேச தரத்திலான பயிற்சி அளிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.

சாபஹாா் துறைமுகத்தில் வா்த்தகத்தை மேம்படுத்த இந்தியாவின் சா்வதேச துறைமுகம் நிறுவனம் (ஐபிஜிஎல்) டெஹ்ரான், சாபஹாரில் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் கடல்சாா் வா்த்தகம் அதிகரிக்கப்படுவதுடன் சாபஹாா் துறைமுகமும் மேம்படும் என்று ஈரான் துணை அதிபா் முகமது முக்பிா் குறிப்பிட்டாா்.

ஈரானுடனான நல்லுறவு வரும் நாள்களில் மேலும் வலுப்பெறும் என்று இந்தியா உறுதி அளித்தது.

மத்திய, தெற்கு, தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையேயான பொருளாதாரத்தை மேம்படுத்த சாபஹாா் துறைமுகம் உதவும் என்று அமைச்சா் சோனோவால் குறிப்பிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-இல் ஆப்கானிஸ்தானுக்கு 7,50,00 டன் கோதுமையை மனிதாபிமான அடிப்படையிலான உதவியாக சாபஹாா் துறைமுகத்தின் வழியாக இந்தியா அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com