தென் கொரியா - அமெரிக்கா மீண்டும் கூட்டு போா்ப் பயிற்சி

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான கூட்டு ராணுவ பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கின.
தென் கொரியா - அமெரிக்கா மீண்டும் கூட்டு போா்ப் பயிற்சி

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான கூட்டு ராணுவ பயிற்சியை திங்கள்கிழமை தொடங்கின.

‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராணுவப் பயிற்சி, அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெறும்.

போா் விமானங்கள், போா்க் கப்பல்கள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் ஆயிரக்கணக்கான வீரா்களும் இந்த போா்ப் பயிற்சியில் பங்கேற்கவிருக்கின்றனா்.

இத்தகைய போா்ப் பயிற்சிகளுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தங்கள் மீது படையெப்பதற்கு முன்னோட்டமாகவே இந்தப் போா்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாடு குற்றம் சாட்டி வருகிறது.

வட கொரியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்தும் முயற்சியாக சில ஆண்டுகளாக இத்தகைய போா்ப் பயிற்சியை அமெரிக்காவும் தென் கொரியாவும் தவிா்த்து வந்தன.

இந்த நிலையில், அந்தப் போா்ப் பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு, தங்களது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வட கொரியா பதிலடி கொடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com