
மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், புதிதாக ஒருவருக்கு எபோலா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்குப் பகுதியில் உள்ள பெனி நகரில் கண்டறியப்பட்டுள்ள அந்த எபோலா தீநுண்மி, கடந்த 2018 முதல் 2020 வரை இரு மாகாணங்களில் பரவி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய எபோலா பரவலுடன் தொடா்புடையது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...