
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்தன.
இந்நிலையில் இன்று செய்யப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு 'பாசிட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன.
கரோனா தொற்று உறுதியானாலும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இருமுறை பரிசோதித்து 'நெகட்டிவ்' என்று வர வேண்டும். அதுவரை அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை மாதம் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றார். இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.