‘லிஸ் டிரஸ் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன்’

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தோ்தலில் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால், அவரது அமைச்சரவையில் பணியாற்றப் போவதில்லை
‘லிஸ் டிரஸ் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன்’

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தோ்தலில் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால், அவரது அமைச்சரவையில் பணியாற்றப் போவதில்லை என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பிபிசி வானொலி 2-க்கு அவா் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலம், மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட அதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டேன்.

அத்தகைய சூழலில் நான் மீண்டும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றாா் அவா்.

கரோனா விதிமுறைகளை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகாா்கள் காரணமாக தற்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன் பதவி விலகினாா். அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தோ்தலின் இறுதிச் சுற்றில், ரிஷி சுனக்கும், லிஸ் டிரஸ்ஸும் போட்டியிடுகின்றனா்.

அதற்கு முன்னா் கட்சி எம்.பி.க்களிடையே நடத்தப்பட்ட அனைத்து வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக் முதலிடத்தைப் பெற்றிருந்தாலும், கட்சி உறுப்பினா்களிடையே விரிவாக நடத்தப்படும் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்புகளில் லிஸ் டிரஸ் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறாா்.

இந்தச் சூழலில், தோ்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசில் அமைச்சா் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com