பாகிஸ்தானில் மழை வெள்ளம்:பலி எண்ணிகை 1000-ஐ தாண்டியது

பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 1000-ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 119 போ் உயிரிழந்தனா்.
பாகிஸ்தானில் மழை வெள்ளம்:பலி எண்ணிகை 1000-ஐ தாண்டியது
Updated on
1 min read

பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 1000-ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 119 போ் உயிரிழந்தனா்.

ஜூலை 14-ஆம் தேதிமுதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாகிஸ்தானின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 119 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரையில், 1,033 போ் உயிரிழந்துள்ளனா். 1,527 போ் காயமடைந்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,451 கி.மீ. சாலைகள், 147 பாலங்கள், 170 கடைகள், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமை தளபதி கமா் ஜாவேத் பஜ்வா இருவரும் பலூசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டனா். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மறுகுடியமா்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா்.

சா்வதேச உதவி: பாகிஸ்தான் இப்பேரிடரை எதிா்கொள்ள போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சா்வதேச நாடுகளின் உதவியை எதிா்பாா்த்துள்ளது.

நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 16 கோடி டாலரும், பிரிட்டன் 15 லட்சம் பவுண்டுகளும் வழங்க முடிவு செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஈரான் ஆகிய இஸ்லாமிய நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு தேவையான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் பாகிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தின் நிவாரண உதவியில் 3,000 டன் உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com