எலான் மஸ்க் நிறுவனத்தில் தட்டச்சு செய்யும் குரங்குகள்! ஏன் தெரியுமா?

மூளையைக் கொண்டு கணினி இயக்கும் வகையிலான பரிசோதனை இன்னும் ஆறு மாதங்களில் இறுதிக்கட்டத்தை அடையும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 
எலான் மஸ்க் நிறுவனத்தில் தட்டச்சு செய்யும் குரங்குகள்! ஏன் தெரியுமா?

மூளையைக் கொண்டு கணினி இயக்கும் வகையிலான நியூராலிங்க் பரிசோதனை இன்னும் ஆறு மாதங்களில் இறுதிக்கட்டத்தை அடையும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

மூளை - கணினியை இடைமுகம் செய்து பார்வை நகர்த்தல் மூலம் கணினியை செயல்பட வைக்கும் நோக்கத்தில் இந்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

அந்தவகையில், முதல்கட்டமாக குரங்குகளைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் குரங்குகள் விடியோ கேம் விளையாடுவது, எளிமையான முறையில் எண்களை, எழுத்துக்களை எழுத வைப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியிலுள்ள நியூராலிங்க் நிறுவனத்தில் இந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. எலான் மஸ்க்கின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக மூளையின் கட்டளைகளைக் கொண்டு கணினியை இயக்குவது உள்ளது. 

பலகட்ட சோதனைகளின் மூலம் தற்போது குரங்குகளைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதாவது குரங்கின் மூளை சொல்லும் உத்தரவுக்கு ஏற்ப கணினித் திரை செயல்படும். இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், அடுத்த ஆறு மாதங்களில் பரிசோதனை முயற்சியாக முதல் மனித மூளையில் இந்த நியூராலிங்க் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும். அதற்கான தரவு சேகரிப்புப் பணிகள் முடைவடைந்துள்ளன. முதல் மனிதனுக்கு இந்த சோதனையை செய்வதற்கு முன்பு நாங்கள் முழுக்க தயாராக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com