கனடாவைச் சேர்ந்த 21 வயதான டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்

கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர் தனது 21 வயதில் திடீரென காலமானார். 
Photo: meghaminnd instagram
Photo: meghaminnd instagram
Published on
Updated on
1 min read

கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர் தனது 21 வயதில் திடீரென காலமானார். 

கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர்(21). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கல்லூரியில் சேர்ந்தவுடன் மேகா, டிக்டாக் உள்ளிட்ட இணையதங்களில் அடிக்கடி விடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் பிரபலமானார்.

டிக்டாக்கை பொறுத்தவரையில் மட்டும் அவரை சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

இதுதவிர மேகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களும் உள்ளனர். இந்த நிலையில் மேகா கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலமாகியிட்டதாக அவரது பெற்றோர் மேகாவின் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் எவ்வாறு காலமானார் என்கிற தகவலை அவர்கள் குறிப்பிடவில்லை.

மேலும் இறுதிச் சடங்கு நவம்பர் 29ஆம் தேதி அன்று நடைபெற்றுள்ளது. 21 வயதே டிக்டாக் பிரலம் மேகா காலமான சம்பவம் அவரது ஃபாலோயர்ஸ் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com