'சூரிய ராணி' மரியா டெல்கேஸ் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்

சூரிய ராணி என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தியின் முன்னோடியாக விளங்கிய டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்தநாளை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
'சூரிய ராணி' மரியா டெல்கேஸ் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்
'சூரிய ராணி' மரியா டெல்கேஸ் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்

சூரிய ராணி என்று அழைக்கப்படும் சூரிய மின்சக்தியின் முன்னோடியாக விளங்கிய டாக்டர் மரியா டெல்கேஸ் பிறந்தநாளை கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கூகுள் நிறுவனம், முக்கிய நபர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சூரிய சக்தியின் முன்னோடியான டாக்டர் மரியா டெல்கேஸ், மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக்காக கௌரவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றலாம் என்று மரியா உறுதியாக நம்பினார். ஆம். அவர் சொன்னது சரிதான். அதற்காக அவர் 1952ஆம் ஆண்டு பெண் பொறியாளர்கள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1900ஆம் ஆண்டு ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் பிறந்தவர் டாக்டர் டெல்கேஸ். இயற்பியல் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர். 1924ஆம் ஆணடு பிஎச்டி முடித்தார்.  பிறகு அமெரிக்கா சென்று பயோபிசிஸ்ட் ஆகப் பணியைத் தொடர்ந்தார். எம்ஐடியில் சூரிய சக்தி ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 

இரண்டாம் உலகப் போரின் போது, கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை உருவாக்க அமெரிக்க அரசால் அழைக்கப்பட்டார். இந்த உயிர்காக்கும் திட்டத்தின் மூலம், பசிபிக் கடலில் நிறுத்தப்பட்ட ஏராளமான வீரர்களின் உயிரைக் காக்க உதவியது.

பிறகு மீண்டும் எம்ஐடி திரும்பிய டெல்கேஸ், ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராக இணைந்தார். அவர், எம்ஐடி பேராசிரியருடன் இணைந்து, சூரிய சக்தியால் வெப்பமாகும் வீட்டை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது திட்டம் தோல்வியடைந்தது. அந்தக் குழுவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். ஆனால் அவரது கூற்றுகள் மட்டும் நிலைத்தன.

பிறகு 1948ஆம் ஆண்டு தனியாரின் உதவியுடன் டோவர் சூரிய சக்தி வீடகளை உருவாக்கினார். அந்த திட்டம் வெற்றி பெற்றது, ஊடகங்கள் மூலம் புகழ்பெற்றார் டெல்கேஸ்.

பல வெற்றிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சியிலேயே தனது வாழ்நாளைக் கழித்தவர் டாக்டர் மரியா டெல்கேஸ்.  பிறகு அவர் ஃபோர்டு அறக்கட்டளையை உருவாக்கினார், இப்போதும் அவர் உருவாக்கிய சூரியசக்தி அடுப்பு பயன்பாட்டில் உள்ளது.

சூரிய சக்தி மூலம் உருவாக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்துள்ளார். அவர் வசம் சுமார் 20 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை வைத்திருந்தார். ஏராளமான எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இதனால்தான் அவர் சூரிய ராணி என்று அழைக்கப்படுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com