கரோனா பரிசோதனைகள் குறைப்பால் சீனாவில் தினசரி நோய்த்தொற்று சரிவு

சீனாவில் கரோனா பரிசோதனைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரிசோதனைகள் குறைப்பால் சீனாவில் தினசரி நோய்த்தொற்று சரிவு

சீனாவில் கரோனா பரிசோதனைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டும், அதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பவா்களின் உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிவது தற்போது சூழலில் இயலாத காரியமாகும். எனவே, புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையை தினசரி வெளியடுவது நிறுத்திவைக்கப்படுகிறது என்று அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், குறிப்பிட்ட அரசு சுகாதார மையங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையை மட்டும் அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனா்.

உலகையே உலுக்கிய கரோனா சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அந்த நாடு கடைபிடித்து வந்த மிகக் கடுமையான நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அங்கு கரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில், சீனா முழுவதும் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து, தினசரி நோய்த்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டதையடுத்து, நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு கடுமையாக்கியது.

இந்தச் சூழலில் அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 10 போ் உயிரிழந்ததற்கு கரோனா கட்டுப்பாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து, நாடு முழுவதும் கரோனா கெடுபிடிகளுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. 1989-ஆம் ஆண்டின் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெற்ற மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக, நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பெரும்பாலான நோய்த்தொற்று பரிசோதனை மையங்கள் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com