உக்ரைன் போரில் உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி:  அமெரிக்க சிஐஏ பாராட்டு!

உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாக
உக்ரைன் போரில் உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி:  அமெரிக்க சிஐஏ பாராட்டு!

வாஷிங்டன்: உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபரிடம் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியுள்ளார்.  

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சாதகமானவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. இது சர்வதேச அளவில் பேசும்பொருளானது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கவலைகள் தெரிவித்தன.

இந்த நிலையில்தான் ரஷியா அணு அயுதங்களைப் பயன்படுத்தும் முடிவில் இருந்து மாறியதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி புதினிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தியதும் ஒரு காரணம் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கூறியுள்ளார்.  

தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், உக்ரைன் போர் விவகாரத்தில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் ரஷியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் மற்றும் உக்ரைன் போரின் சூழலில் உலகளாவிய பேரழிவைத் தவிர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் போது உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக இந்தியா பலமுறை எச்சரித்துள்ளது. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தை ரஷிய அதிபரிடம் மோடி தொடர்ந்து வலியுறுத்தினார். இது உலகளாவிய பேரழிவு ஏற்படுவதைத் தவிர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும் தங்கள் கவலைகளை எழுப்பியிருந்தனர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நான் கருதுகிறேன் என்று பர்ன்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) இயக்குநர் பில் பர்ன்ஸ் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, ஏனெனில் புதின் முன்னதாக அதிகரித்து வரும் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைப் பற்றி எச்சரித்திருந்தார். அணு ஆயுதப் போருக்கு எதிராக கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் ரஷியா போராடும் என்று புதின் எச்சரித்திருந்தார். 

அமெரிக்க சிஐஏ தலைவரின் கருத்துக்கள் உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு மற்றொரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com