
தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து பதிவாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், நான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கருத்துக் கணிப்பை முன்னெடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில் பெரும்பாலானோர் எலான் மஸ்க் பதவியில் நீடிக்க வேண்டும் என வாக்களித்து வருகின்றனர்.
ஏற்கெனவே டிரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது ட்விட்டர் கணக்கை திரும்ப கொண்டுவந்தார் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்திலிருந்து, சுமார் 7,500 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பலர் தாங்களாகவே வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.