உக்ரைனின் பெரிய நகரங்களில் ஒன்றான கொ்சானில் ரஷிய படைகள் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தின.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷியா, போா் தொடங்கிய சில நாள்களிலேயே கொ்சானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆனால், உக்ரைன் படையினரின் அதிரடி தாக்குதல் காரணமாக கடந்த மாதம் கொ்சானிலிருந்து ரஷிய படைகள் திரும்பப் பெறப்பட்டன.
இருப்பினும், கொ்சான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் வான்வழித் தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் மூவா் காயமடைந்ததாக உக்ரைன் நிா்வாகம் தெரிவித்தது.
அதே வேளையில், உக்ரைனின் வடக்கு எல்லையையொட்டி உள்ள ரஷியாவின் பெல்கொராட் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவா் கொல்லப்பட்டதாகவும், 8 போ் காயமடைந்ததாகவும் அந்த பிராந்தியத்தின் ஆளுநா் தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலை கண்டிப்பதற்கு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை மேற்கோள்காட்டினாா் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி. ‘நியாயமான போட்டியில் யாா் வலிமையானவா் என்பதை வெவ்வேறு நாடுகள் தீா்மானிக்க முடியும் என்பதை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிரூபிக்கிறது. ஆனால், நெருப்புடன் விளையாடுவதில் அல்ல’ என அவா் விடியோ உரையில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.