பதவியேற்க ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின் விலகுகிறேன்: எலான் மஸ்க் ட்வீட்

பதவியேற்க ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பதவியேற்க ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின் விலகுகிறேன்: எலான் மஸ்க் ட்வீட்


பதவியேற்க ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதில் இருந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளான ஊழியர்களின் பணி நீக்கம், ப்ளூ டிக் விவகாரம், போலி கணக்குக்கு தடை போன்றவை பேசும்ப்பொருளாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனிடையே சி.என்.என், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், தி இண்டிபெண்டன்ட் உள்ளிட்ட பிரபரல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளையும் மஸ்க் முடக்கியதால் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தது. 

ட்விட்டரின் இதுபோன்ற செயல்கள் மன உளைச்சலை தருவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் "நான் ட்விட்டர் நிறுவனத்தின் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று மக்களிடம் கேட்டிருந்தார். வாக்கெடுப்பின் "முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்" என்றும் அவர் உறுதியளித்திருந்தார். 

மஸ்க்கின் ட்விட்டர் பதிவு அவரது முந்தைய கருத்துக்கணிப்புக்கு பதிலடியாக வந்தது,  மக்களின் வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர் 'ஆம்' என்றும் , சுமார் 42.5 சதவீதம் பேர் 'இல்லை' என்றும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில், எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சற்று முன்பு ட்விட்டர் பக்க பதிவில்,  "பதவியேற்க ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பதவியில் இருந்து விலகுவதாகவும், அதன்பின், மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன்" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com