செவ்வாய்க் கிரகத்தின் உள்புறத்தை ஆய்வு செய்த ‘இன்சைட்’ நாசாவிடமிருந்து விடைபெற்றது!

நான்கு ஆண்டுளுக்கு மேலாக செவ்வாய்க் கிரகத்தின் உள்புறத்தை தனித்துவமான அறிவியல் ஆய்வுக்குப் பிறகு ‘இன்சைட்’ மார்ஸ் லேண்டர் நாசாவிடமிருந்து புதன்கிழமை விடைபெற்றது. 
செவ்வாய்க் கிரகத்தின் உள்புறத்தை ஆய்வு செய்த ‘இன்சைட்’ நாசாவிடமிருந்து விடைபெற்றது!


வாஷிங்டன்: நான்கு ஆண்டுளுக்கு மேலாக செவ்வாய்க் கிரகத்தின் உள்புறத்தை தனித்துவமான அறிவியல் ஆய்வுக்குப் பிறகு ‘இன்சைட்’ மார்ஸ் லேண்டர் நாசாவிடமிருந்து புதன்கிழமை விடைபெற்றது. 

செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம் உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை முதன்முறையாக அனுப்ப அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு முடிவுசெய்தது. இதன்படி, இன்சைட் என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பியது. 

அது கடந்த நான்காண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தின் உள்புற அடுக்குகள், அதன் அழிந்துபோன காந்த டைனமோவின் மேற்பரப்பிற்கு அடியில் வியக்கத்தக்க வலுவான எச்சங்கள், செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் உள்ள வானிலை மற்றும் பல நிலநடுக்க செயல்பாடுகள் பற்றிய தனித்துவமான பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம்,  செவ்வாய்க் கிரகத்தின் மையப்பகுதி திரவத்தாலானது என்பதை விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்த முடிந்தது. 

செவ்வாயின் மேற்பரப்பின் தடிமனையும் தீர்மானிக்க முடிந்தது. இதன் மூலம் செவ்வாயின் மேற்பரப்பு குறைவான அடர்த்தியைக்கொண்டது. அது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது என்ற முடிவுக்கும் வர முடிந்தது. சில விண்கற்களின் மோதல் ஏற்பட்டதால் நிகழ்ந்த 1,319 நில நடுக்கங்களை (அதிர்வுகளை) இன்சைட் பதிவு செய்துள்ளது.

"இன்சைட் மூலம், பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு பயணத்தின் மையமாக, அப்போலோ பயணங்களுக்குப் பிறகு, விண்வெளி வீரர்கள் நிலவுக்கு நில நடுக்க அளவீடுகளைக் கொண்டு வந்தபோது, முதன்முறையாக நில நடுக்க ஆய்வு மையமாக இருந்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பனிக்கட்டிகளின் அளவை பதிவு செய்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய்க் கிரகத்தில் இன்சைட் ஆய்வுப் பணியை மேற்கொண்டது. இன்சைட் கடைசியாக டிசம்பர் 15 ஆம் தேதி பூமியுடன் தொடர்பு கொண்டது.

தெற்குகலிபோர்னியாவில் உள்ள ஏஜென்சியின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) மிஷன் கன்ட்ரோலர்கள் இரண்டு தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு இன்சைட் லேண்டரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, இதனால் இன்சைட் லேண்டரின் சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரிகள் சேமிக்கும் ஆற்றல் இழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு நாசா வந்துள்ளது.  

கலிபோர்னியாவில் உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) முதன்மை ஆய்வாளர் புரூஸ் பானெர்ட் கூறுகையில், “இன்சைட் கடந்த நான்கு ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தில் எங்களின் நண்பராகவும் சக ஊழியராகவும் இருந்து பணியாற்றியது. அதனிடமிருந்து நாங்கள் விடைபெறுவதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. ஆனால், அதன் பணிகள் பயனுள்ளதாக இருந்தது” என்று கூறியுள்ளார். 

வாஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் ஜுர்புசென் கூறுகையில், "இந்தப் பணி தொடங்குவதையும் தரையிறங்குவதையும் நான் பார்த்தேன், ஒரு விண்கலம் விடைபெறுவது எப்போதுமே சோகமாவே உள்ளது, இன்சைட் கடந்த நான்கு ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தில் இருந்து செயல்பட்டது கண்கவர் அறிவியல் கொண்டாட்டம்" என்றார். "இந்த டிஸ்கவரி ப்ரோகிராம் மிஷனில் இருந்து நில அதிர்வு தரவு மட்டுமே செவ்வாய்க் கிரகத்தில் மட்டுமல்ல, பூமி உள்பட மற்ற பாறைகளிலும் உள்ள மிகப்பெரிய நுண்ணறிவுகளை வழங்குகிறது." என்று கூறியுள்ளார்.

"இன்சைட் அதன் பெயருக்கு ஏற்றவாறு செயல்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதில் ஒரு விஞ்ஞானியாக, லேண்டர் என்ன சாதித்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பாக உள்ளது. இந்த பணியை வெற்றிகரமாக செய்ய உதவிய உலகெங்கிலும் உள்ள மக்கள் முழு குழுவிற்கும் நன்றி,” என்று ஜேபிஎல் இயக்குநர் லெஷின் கூறியுள்ளார். "இன்சைட் " விடைபெறுவது வருத்தமளிக்கிறது, ஆனால், அதன் பணிகள் பயனுள்ளதாகவும் தொடர்ந்து பேசப்படும், தகவல் மற்றும் ஊக்கமளிக்கிறது." என்று கூறியுள்ளார். 

"நாங்கள் புதிய தளத்தை உருவாக்கினோம், எங்கள் அறிவியல் குழு வழியில் நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் பற்றி பெருமைப்படலாம்." என்று இன்சைட் நில நடுக்க அளவீட்டின் முதன்மை ஆய்வாளர் கூறியுள்ளார்.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்சைட் ஓய்வு பெறலாம். ஆனால், செவ்வாய்க் கிரகத்தின் ஆழமான உள்புறத்தில் இருந்து இன்சைட் கண்டறிந்த தரவுகள் நிலைத்து நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com