அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 18 பேர் பலி; மின்சார, விமான சேவைகள் ரத்து

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.

பனிப்புயல் காரணமாக விமான சேவைகள், சாலை போக்குவரத்து, மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

"வெடிகுண்டு சூறாவளி" எனப்படும் பனிப்புயலால், சனிக்கிழமையன்று 2,300 அமெரிக்க விமானங்களை ரத்து செய்யப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமை 5,300 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.

கடுமையான பனிப்புயல் தாக்கி 18 பேர் பலியானதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை முதல் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் எழுந்த பனிப்புயல், அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிகளை உறையச் செய்துள்ளது. தேசிய வானிலை சேவை மையத்தின கருத்துபடி, வெப்பநிலை -55 ஃபாரன்ஹீட்டாக (-48 டிகிரி செல்சியஸ்) இருந்ததுள்ளது.

பனிப்புயல் காரணமாக, பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்கு உள்ளாகின.  வீடுகளும், வெளியே நிற்கும் கார்களும் பனியில் மூடியுள்ளன. சாலைகளில் பல அடி மீட்டருக்கு பனித்துளிகள் படர்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால்,அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com