
மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை, ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஆக ஆர்வம் காட்டியுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.
கருத்துகளை நவீனமயமாக்கம் என்ற முறையில் அவரது நடவடிக்கைகள் வெறுப்பு கருத்துகளையும் பொய்யான தகவல்களையும் அதிகரிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவரைப் பற்றிய தகவல்களைப் பரப்பியற்காக தி நியூயாா்க் டைம்ஸ், சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளா்களின் ட்விட்டா் கணக்குகள் வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டன. இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று ஐரோப்பிய யூனியனும் ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ட்விட்டா் தலைமை பொறுப்பில் இருந்து நான் வெளியேற வேண்டுமா? வாக்கெடுப்பில் வரும் முடிவுக்கு கட்டுப்படுவேன்’ என தெரிவித்து வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினாா்.
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 1.7 கோடிக்கும் அதிகமான ட்விட்டா் பயனாளிகளில் 57.5 சதவீதம் போ் எலான் மஸ்க் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனா்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இப்பதவியை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக முடிவெடுக்கும் ஒருவா் கிடைத்தவும் நான் பதவி விலகுவேன். இதன் பின்னா் மென்பொருள் மற்றும் சா்வா் குழுக்களில் மட்டும் இணைந்து செயல்படுவேன்’ எனத் தெரிவித்தாா்.
Dear Mr. Musk(@elonmusk):
— Dr.SHIVA Ayyadurai, MIT PhD. Inventor of Email (@va_shiva) December 24, 2022
I am interested in the CEO position @Twitter. I have 4 degrees from MIT & have created 7 successful high-tech software companies. Kindly advise of the process to apply.
Sincerely,
Dr. Shiva Ayyadurai, MIT PhD
The Inventor of Email
m:1-617-631-6874
இந்நிலையில் சிவா அய்யாதுரை சுட்டுரை பதிவில், “ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான் எம்ஐடியில் 4 பட்டங்கள் பெற்றுள்ளேன். வெற்றிகரமாக 7 உயர் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கியுள்ளேன். விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை அறிவுறுத்துங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டில், சிவா அய்யாதுரை ஒரு கணினி நிரலை உருவாக்கினார், அதை அவர் "மின்னஞ்சல்" என்று அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிரல் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்கள், மெமோ, இணைப்புகள், முகவரி புத்தகம் போன்ற இன்டர்ஆபிஸ் மெயில் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் பிரதிபலிக்கிறது.
இதையும் படிக்க: கரோனாவில் இருந்து தப்பிக்க புதிய உத்தி: சீன தம்பதியின் வைரல் விடியோ!
ஆகஸ்ட் 30, 1982 இல், அமெரிக்க அரசாங்கம் சிவா அய்யாதுரையை மின்னஞ்சல் கண்டுபிடிப்பாளராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததோடு, 1978 ஆம் ஆண்டின் கண்டுபிடிப்பிற்காக மின்னஞ்சலுக்கான முதல் அமெரிக்க பதிப்புரிமையை அவருக்கு வழங்கியது.