பாகிஸ்தானில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 5,830 ஆகப் பதிவு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,830 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 5,830 ஆகப் பதிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,830 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

முந்தையநாள் தொற்று பாதிப்பு 6,047 ஆக இருந்த நிலையில், இன்று 5,830 ஆக உள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,44,2,263 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதித்த 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 29,372 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 59,786 கரேனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் 5,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு விகிதம் 9.75 சதவிகிதமாக உள்ளது.

பாகிஸ்தானில் கரோனா ஐந்தாம் அலையை எதிர்கொண்டு வருகின்றனர். அதிக மக்கள்தொகை கொண்ட கராச்சியில் 54 சதவீதம் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com