
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா பயணிகள் வர விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவதற்கு இன்னும் அதிக காலம் ஆகாது. இதுகுறித்து இந்த வாரமே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றாா் அவா்.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் முழு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆஸ்ரேலியா்களும், நாட்டில் வசிப்பவா்களும் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.