உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தல்

மிகவும் வித்தியாசமான சூழலை கையாண்டுவருவதால் விவகாரம் தீவிரமாக மாறலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கமாக இருந்த உக்ரைனுக்கு அருகே ராணுவ வீரர்களை குவித்துவருவதால் ரஷியா அந்நாட்டின் மீது படையெடுக்குமோ என அச்சம் நிலவிவருகிறது. இந்நிலையில், அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என அமெரிக்கர்களுக்கு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

பனிப்போருக்கு பிறகான காலத்திலிருந்து, அமெரிக்க, ரஷிய நாடுகளுக்கிடையே நிலவிவந்த பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் எல்லை பகுதியில் 1,30,000 ராணுவ வீரர்களை 12க்கும் மேற்பட்ட படை பிரிவுகளாக ரஷியா குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். நாங்கள் உலகின் மிகப்பெரிய படைகளில் ஒன்றைக் எதிர் கொண்டுள்ளோம். இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை. விவகாரம் விரைவாக தீவிரமடையலாம்

ரஷ்ய படையெடுத்தால் அமெரிக்கர்களை காப்பாற்ற கூட எந்த சூழ்நிலையிலும் அமெரிக்க படைகளை உக்ரைனுக்கு அனுப்ப போவதில்லை. அது உலகப் போர். அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் ஒருவரையொருவர் சுடத் தொடங்கும் போது, ​​நாம் வித்தியாசமான உலகில் இருப்போம்" என்றார்.

போர் பயிற்சியில் ஈடுபடும் நோக்கில் பெலாரஸ் முழுவதும் டாங்கிகளை ரஷியா குவித்துள்ள நிலையில், பைடன் இம்மாதிரியான கருத்துகளை தெரிவித்துள்ளார். ரஷியாவின் செயலுக்கு நேட்டோ கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போர் பதற்றத்த தணிக்க மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏவுகணைகள், கனரக ஆயுதங்கள் மற்றும் இயந்திர துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களை ரஷியா நிலைநிறுத்தி இருப்பது சோவியத் ஒன்றியம் உடைந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய வரலாற்றின் ஆபத்தான தருணத்தையே குறிக்கிறது.

கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த நாடுகளிலும் நோட்டோவை விரிவுப்படுத்துவதை ரஷியா கடுமையாக எதிர்த்துவருகிறது. இதன் காரணமாக, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷியா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com