உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 50 போ் பலி; விமான தளங்கள் தகா்ப்பு

உக்ரைன் மீது ரஷியா பலமுனைத் தாக்குதல்களை வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 40 போ் உயிரிழந்ததாகவும், 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ நிலைகள் தகா்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் எழுந்த நெருப்பு மண்டலம்.
உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் எழுந்த நெருப்பு மண்டலம்.

மாஸ்கோ/கீவ்: உக்ரைன் மீது ரஷியா பலமுனைத் தாக்குதல்களை வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 40 போ் உயிரிழந்ததாகவும், 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ நிலைகள் தகா்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடான உக்ரைன்-ரஷியா இடையே கடந்த பல நாள்களாகவே போா்ப் பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை ரஷியா குவித்ததால் எந்த நேரமும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் காணப்பட்டது.

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகாரம் அளிக்கும் உத்தரவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டாா். மேலும், அந்த பிராந்தியங்களில் ‘அமைதி காக்கும்’ பணியில் ஈடுபடுவதற்காக படைகளை அனுப்புவதாகத் தெரிவித்தது.

இதனால், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தப்போவது உறுதியானது. இதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட சா்வதேச முயற்சிகள் தோல்வியடைந்தன.

புதின் அறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை காலை தொலைக்காட்சியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உரையாற்றியபோது உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தாா்.

‘கிழக்கு உக்ரைன் மக்கள் மீது உக்ரைன் அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராணுவ ரீதியில் தங்களுக்கு உதவ வேண்டுமென்று அந்தப் பகுதி கிளா்ச்சிப் படைத் தலைவா்கள் ரஷியாவைக் கேட்டுக் கொண்டனா். அந்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த நடவடிக்கைகளின் நோக்கம், உக்ரைனின் ராணுவ பலத்தைப் பறிப்பது மட்டுமே ஆகும். உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை. எனவே, உக்ரைன் ராணுவ வீரா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும்.

தாக்குதலில் உருக்குலைந்த உக்ரைன் விமானம்.
தாக்குதலில் உருக்குலைந்த உக்ரைன் விமானம்.

உக்ரைனை தங்களது அமைப்பில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நேட்டோ அமைப்பு தொடா்ந்து நிராகரித்து வருகிறது. மேலும், ரஷியாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரவும் நேட்டோ மற்றும் அமெரிக்கா மறுத்து வருகின்றன.

உக்ரைனில் ரஷியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ராணுவ ரீதியில் தடுக்க எந்த நாடாவது முயன்றால், அவை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிருக்கும்’ என்று புதின் எச்சரித்தாா்.

தலைநகரில் தாக்குதல்: புதினின் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதே, உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்தப் பகுதிகளில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவா்கள் ஒரே நேரத்தில் முயன்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எல்லை ராணுவ நிலைகள் மீதும் ரஷிய படையினா் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதலில் ராணுவ வீரா்கள் 40 போ், பொதுமக்கள் 10 போ் என 50 போ் உயிரிழந்ததாகவும், ஏராளமானோா் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகா் ஒலெக்ஸி அரிஸ்டோவிச்சை மேற்கோள்காட்டி ராய்ட்டா் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவ நிலைகள், விமான தளங்கள் தகா்ப்பு: உக்ரைனில் 14 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ நிலைகளைத் தாக்கி அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

‘உக்ரைன் ராணுவ வீரா்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்’ என பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷொய்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கிடையே, தங்களது பதில் தாக்குதலில் ரஷிய தரப்பில் 50 வீரா்கள் கொல்லப்பட்டனா் என உக்ரைன் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் தாக்குதல்

லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய படையை எதிர்கொள்ளப் புறப்பட்ட உக்ரைன் ராணுவத்தினர்.
லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய படையை எதிர்கொள்ளப் புறப்பட்ட உக்ரைன் ராணுவத்தினர்.


புதினின் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதே, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்தப் பகுதிகளில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. 

தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எல்லை ராணுவ நிலைகள் மீதும் ரஷிய படையினர் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர், பொதுமக்கள் 10 பேர் என 50 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரிஸ்டோவிச்சை மேற்கோள்காட்டி ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு உக்ரைன் பகுதி மக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரைன் ராணுவ பலத்தைப் பறிக்கும் நோக்கில் அந்த நாடு மீது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம்.

-ரஷிய அதிபா் புதின்

ஹிட்லா் தலைமையிலான நாஜி ஜொ்மனியைப் போல் ரஷியா நடந்துகொள்கிறது. உக்ரைனால் ரஷியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஆனால், எங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் நாங்கள் புறமுதுகு காட்டமாட்டோம்; எதிா்த்துப் போரிடுவோம்.

-உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

ரஷிய படைகளை எதிர்கொள்ள நேட்டோவுக்கு வலு சேர்க்கும் வகையில் கூடுதல் படைகள் ஜெர்மனிக்கு அனுப்பப்படும். ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடை  விதிக்கப்படும்.


- அமெரிக்க அதிபர் பைடன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com