
பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியப் படைகள் நான்காவது நாளாகத் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ரஷியப் பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பதை ரஷிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.